ADDED : செப் 18, 2026 05:52 PM
திருவாடானை: திருவாடானை பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் உட்பட பல்வேறு பணிகளை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். திருவாடானை அருகே அச்சங்குடி, பெருமானேந்தல் பகுதியில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் நடைபெறும் குழாய் பதிக்கும் பணிகளை கலெக்டர் சிவகுருபிரபாகரன் பார்வையிட்டார். பனிச்சகுடி ஊராட்சி நெடுமரம் கிராம மக்களின் கோரிக்கையின் படி அங்குள்ள ஊருணி ஆக்கிரமிப்பகள் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஊருணியின் நீர் வரத்து மற்றும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மழைக்காலங்களில் நீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது திருவாடானை தாசில்தார் தாமஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜி, ஜெயமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
