தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு


UPDATED : நவ 24, 2026 07:30 PM

ADDED : நவ 24, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 07:30 PM ADDED : நவ 24, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: சித்தார்கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.

தேவிபட்டினம் அருகே சித்தார் கோட்டை ஊராட்சி, பழநிவலசை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் சிவ குரு பிரபாகரன் பள்ளியின் அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், சுகாதாரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து வெண்ணத்துார் ஊராட்சி ஆண்டிச்சியேந்தல், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட கருங்குடி ஊராட்சி பால்குளம் கிராமத்தில் கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர், வருவாய் துறையினர் முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர், ராதானுார் ஊராட்சில் கால்நடைகளுக்கு தேவையான மாட்டுத் தீவன உற்பத்திக்கான இடவசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us