/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறங்காவலர் நியமிக்காததால் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு
/
அறங்காவலர் நியமிக்காததால் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு
அறங்காவலர் நியமிக்காததால் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு
அறங்காவலர் நியமிக்காததால் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு
ADDED : மே 18, 2025 12:14 AM
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் பெரும்பாலான கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்காததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 128 கோயில்கள் உள்ளன.
இந்த 128 கோயில்களில் 40 கோயில்களுக்கு மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மற்ற கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடக்கவில்லை. இதனால் விண்ணப்பித்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத்துறையினரால் கோயில்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற சாத்தியமில்லை. அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டால் மட்டுமே வளர்ச்சி பணிகள் நடைபெறும். இனிமேல் கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடப்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
எனவே அரசு தலையிட்டு உடனடியாக அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அறங்காவலராக நியமிக்கப்பட்ட 40 பேர்களில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பதவிக்காலம் முடிந்துள்ளது.