/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் வளர்ச்சி பணிகள்
/
முதுகுளத்துாரில் வளர்ச்சி பணிகள்
ADDED : ஜன 26, 2025 05:56 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றியத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
முதுகுளத்துார் ஒன்றியத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
அப்போது முதுகுளத்துார்-உத்தரகோசமங்கை ரோடு ரூ.4.35 கோடியில் கட்டப்பட்டுள்ள ரோடு பணி, முதுகுளத்துார் திடல் தெருவில் அம்ருத் திட்டத்தில் ரூ.1.19 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஊருணி மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.
முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், டி.ஆர்.ஓ., கோவிந்தராஜலு, சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், தனித்துணை கலெக்டர் தனலட்சுமி பங்கேற்றனர்.

