/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் சக்கரத் தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
தேவிபட்டினம் சக்கரத் தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
தேவிபட்டினம் சக்கரத் தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
தேவிபட்டினம் சக்கரத் தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2025 04:28 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை எதிரே அமைந்துள்ள சக்கரம் தீர்த்த குளத்தில் மாசடைந்த நீரை துாய்மைப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தினர்.
தேவிபட்டினத்தில்  நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு திருமண தடை, ஏவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்வதுக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  ஆடி, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பிதுர்கடன் கொடுப்பதற்காக, பக்தர்கள் வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடிய பின்பு, எதிரே அமைந்துள்ள சக்கர தீர்த்த குளத்தில் நீராடுவது வழக்கம். ஆனால், சக்கர தீர்த்த குளத்தில் மாசுகளால் குளத்து நீரில் துர்நாற்றம் வீசி வருவதால், குளத்தில் நீராடும் பக்தர்கள் பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சக்கர தீர்த்த குளத்து நீரை ஆய்வு செய்து, குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

