/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி முத்தாலம்மனுக்கு செவ்வாய் சாட்டு காப்பு கட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தடை

ADDED : நவ 19, 2024 05:19 AM

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் செவ்வாய் சாட்டு விழா நடக்கிறது. இதன்படி இன்று (நவ.19) அம்மனுக்கு காப்பு கட்டப்படும். நவ.26 வரை 8 நாட்கள் நடக்கும் விழாவையொட்டி அம்மன் தானே காப்பு கட்டி கொள்வதாக ஐதீகம்.
இதனால் பக்தர்கள் இந்த நாட்களில் பொங்கல் வைத்தல், முடி காணிக்கை உள்ளிட்ட அனைத்து வகையான பிரார்த்தனைகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் அபிஷேக, ஆராதனைகள் நடக்க உள்ளது.
விழா நிறைவு நாளில் பொங்கல் படையல் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் செய்துள்ளனர்.