/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை வெயிலுக்கு நிழற்பந்தல் தேவை பக்தர்கள் கோரிக்கை
/
கோடை வெயிலுக்கு நிழற்பந்தல் தேவை பக்தர்கள் கோரிக்கை
கோடை வெயிலுக்கு நிழற்பந்தல் தேவை பக்தர்கள் கோரிக்கை
கோடை வெயிலுக்கு நிழற்பந்தல் தேவை பக்தர்கள் கோரிக்கை
ADDED : மார் 25, 2025 05:38 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பத்தின் தாக்கம் நிலவுகிறது. கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலால் கோயிலின் பிரதான பகுதியில் நடந்து செல்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். பக்தர்களை பாதுகாக்க ஆதிஜெகநாத பெருமாள் கோயில் செல்லும் பிரதான மாட வீதியில் தற்காலிக நிழற்பந்தல் அமைக்க வேண்டும்.
காலணி அணியாமல் வெறும் காலுடன் செல்லும் பக்தர்கள் சிரமத்தை சந்திப்பதால் நலன் கருதி தற்காலிக நிழற்பந்தல் அவசிய தேவையாக உள்ளது என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.