/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த நடைபாதையில் கழிவு துணிகளால் பக்தர்கள் அருவருப்பு

ADDED : மே 22, 2025 11:48 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த நடைபாதையில் கழிவு துணிகள் சிதறி கிடப்பதால் பக்தர்கள் அருவருப்புடன் செல்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின் மாலை நேரத்தில் பொழுது போக்குவதற்காக அக்னி தீர்த்த கடற்கரை அருகில் மத்தியசுற்றுலா நிதி ரூ.1.50 கோடியில் 300 மீ.,ல் நடைபாதை அமைத்தனர்.
இதனுள் ராமாயண வரலாற்றை பக்தர்களுக்கு நினைவுகூரும் விதமாக ஓவிய படங்கள் வரிசையாக உள்ளது. இப்படங்களையும், கடல் அழகையும் கண்டு ரசித்தபடி பக்தர்கள் நடைபாதையில் நடந்து செல்கின்றனர். இந்நிலையில் நடைபாதையில் கழிவு துணிகள், குப்பை ஆங்காங்கே சிதறி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நடந்து செல்கின்றனர்.
இதனை அகற்றி நடைபாதையில் சுகாதாரம் பராமரிக்க நகராட்சிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.