தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : செப் 18, 2025 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமுதி : கமுதி அருகே செங்கப்படையில் சேத்தாண்டி வேடமணிந்து வினோதமான முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கமுதி அருகே செங்கப்படையில் அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. இதனை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியாக வினோதமான முறையில் உடல் ஆரோக்கியம் பெற வேண்டி பக்தர்கள் களிமண், சேறு பூசி சேத்தாண்டி வேடமணிந்து விநாயகர் கோயிலில் கிராமத்தின் முக்கிய விதியில் ஊர்வலமாக நடனமாடி பக்தர்கள் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பால்குடம், சிலாகுத்தி கோயிலுக்கு வந்து பூக்குழி இறங்கினர். அழகு வள்ளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

அன்னதானம் வழங்கப்பட்டது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முக்கிய விதிகளில் முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர். கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us