/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயில் கோயில் ரத வீதியில் பக்தர்கள் அவதி

ADDED : மார் 14, 2024 02:55 AM

ராமேஸ்வரம்,:-ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கோயில் ரத வீதியில் பக்தர்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மார்ச் 10 முதல் ராமேஸ்வரம் பகுதியில் கோடை போல் வெயில் சுட்டெரிக்கிறது. இங்கு ராமநாத சுவாமி கோயிலுக்கு நான்கு ரதவீதிகள் வழியாக வந்து செல்லும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் நிழலைத் தேடி ஓடுகின்றனர்.
வயதானவர்கள், பெண்கள் குழந்தைகளை சுமந்து கொண்டு ஓடிச் செல்லவதால் இடறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. 2017- 18ல் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து கோயில் நிர்வாகம் நான்கு ரதவீதியில் தலா 50 அடி நீளத்தில் நிழல் தரும் பந்தல், குடிநீர் தொட்டி அமைத்தது.
அதன் பின் பந்தல் அமைக்க முன்வரவில்லை. ஓராண்டில் கோயில் உண்டியல், தீர்த்தம், தரிசன கட்டணம் மூலம் ரூ.30 கோடி வருவாய் கிடைக்கும் நிலையில் பக்தர்கள் நலன் கருதி பந்தல், குடிநீர் தொட்டி அமைக்க நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தினர்.