/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில்களில் வசதிகளின்றி சபரிமலை சீசனில் குவியும் பக்தர்கள் பாதிப்பு! கூடுதலாக குடிநீர் கழிப்பறைகள் அமைக்க வலியுறுத்தல்

ADDED : டிச 01, 2025 06:52 AM

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலமான ராமேஸ்வரம் கோயில் மற்றும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் 44வது ஆகவும், உத்தரகோசமங்கை உலகின் முதல் சிவன் கோயிலாக திகழ்கிறது.
இவ்விடங்களுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் உத்தரகோசமங்கை தரிசனம் முடித்த பின்பு அங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள ராணி மங்கம்மாள் சாலை வழியாக திருப்புல்லாணி வந்தடைகின்றனர்.
அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ் வரம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் டூரிஸ்ட் பஸ்களில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பு கின்றனர்.
இவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே ஆன்மிக சுற்றுலா இடங்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்றவாறு குடிநீர் தொட்டிகள், கழிப்பறை மற்றும் வாகன பார்க்கிங் வசதிகளை செய்துதர சம்பந்தபட்ட கோயில் நிர்வாகத்தினர்,
ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.