/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
/
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 27, 2024 01:40 AM

ராமேஸ்வரம்:தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குடியரசு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று இந்த கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.
பின் கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதிகளில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் அக்னி தீர்த்த கடற்கரை வரை குவிந்த வாகனங்களால் ரதவீதியில் நெரிசல் ஏற்பட்டது. மேலும் பயணிகள் அதிகளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனையிலும் குவிந்தனர்.