/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்
/
நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 03, 2026 06:56 AM

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவ பாஷாணத்திற்கு நேற்று வழக்கத்தை விட அதிகஅளவில் பக்தர்கள் வருகை அதிகரித்தது.
உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்திற்கு சென்ற வெளியூர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், வாகனங்களில் நவபாஷாணத்திற்கு வந்ததால் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தது.
நவக்கிரகங்கள் அமைந்து உள்ள பகுதியில் கடல் நீர் உயர்ந்து காணப்பட்டதால் கடலுக்குள் இறங்கி பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் பக்தர்கள் நடைமேடை வழியாக நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நவபாஷாண கோயில் பணியாளர்கள் செய்தனர்.

