/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை
/
கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை
கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை
கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை
ADDED : மார் 11, 2024 05:36 AM
சிக்கல்: -மேலக்கிடராத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர பக்தர்கள் வலியுறுத்தினர்.
மேலக்கிடாரத்தில் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் பனையடியான் கோயில் உள்ளது. இங்கு மாசி களரி பாரிவேட்டை திருவிழாவை ஏராளமானவர்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு வருகின்றனர். இதற்காக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இதன்அருகே சமுதாய கழிப்பறை வளாகம் பயன்பாடு இன்றி தண்ணீர் வசதியின்றி பூட்டியள்ளது. எனவே பக்தர்களின் வசதிக்காக பொது கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும். கோயில் அருகே குடிநீர் தொட்டி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் கூறினர்.