/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலுக்கு இரவு பஸ் ரத்து பக்தர்கள் அவதி:; மீண்டும் அதிகாலை வரை இயக்க கோரிக்கை

ADDED : மார் 03, 2025 05:52 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இரவு 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து இல்லாததால், பக்தர்கள், வெளியூர் சுற்றுலா பயணிகள் டாக்சி, ஆட்டோக்களுக்கு கூடுதலாக செலவு செய்து சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் அதிகாலை வரை அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இரவு பகல் பாராமல் வந்து செல்கின்றனர்.
ஆனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் அரசு டவுன் பஸ் இயக்குவதில்லை. இதுகுறித்து ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கம் முறையிட்டதில் 2005 முதல் ராமேஸ்வரத்திற்கு கோயிலுக்கு இரவு 10 மணிக்கு முதல் அதிகாலை 5 மணி வரை வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பக்தர்கள், உள்ளூர் மக்கள் பயனடைந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக இரவு 10 மணிக்கு மேல் வெளியூர் பஸ்கள் கோயிலுக்கு செல்வதை அரசு நிறுத்தியது. இதனால் நள்ளிரவில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடப்படும் பக்தர்கள், உள்ளூர் மக்கள் பஸ் வசதியின்றி ஆட்டோவுக்கு ரூ.200 முதல் 300 வரை வாடகை கொடுத்து பயணிக்க வேண்டிய அவலம் உள்ளது. இதனால் கூடுதல் செலவீனம் ஏற்படுவதால், பலரும் சாலையில் நடந்தே கோயிலுக்கு செல்கின்றனர். சிலர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஓய்வெடுக்கின்றனர். இதனால் சமூக விரோதிகளால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதுடன்,
உடைமைகளை பறிகொடுக்கும் அபாயம் உள்ளது. எனவே இரவில் வரும் வெளியூரில் இருந்து வரும் அரசு பஸ்களை கோயில் வரை இயக்கிட போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--