தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குப்பை எரிப்பால் பக்தர்கள் அவதி

 குப்பை எரிப்பால் பக்தர்கள் அவதி

 குப்பை எரிப்பால் பக்தர்கள் அவதி


ADDED : மார் 18, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் தெருக்களில் குப்பையை எரிக்கும் புகையால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.

திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் அருகே உள்ள தெருக்களில் குப்பையை குவித்து தீ வைத்து எரிக்கப்படுகிறது.

குப்பையிலிருந்து எழும் கரும்புகை காற்றின் திசைக்கேற்றவாறு சன்னதிக்குள் நுழைகிறது. பிரகாரத்தை வலம் வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

நெடியுடன் கூடிய புகையால் கண்ணை திறந்து பார்க்கக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. புகையால் கோயில் சிற்பங்களும் பாதிக்கப்படுகிறது.

எனவே குப்பையை வேறு இடத்திற்கு மாற்றி அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us