/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீர்த்தாண்டதானம் கடற்கரையில் கடற்பாசியால் பக்தர்கள் தவிப்பு
/
தீர்த்தாண்டதானம் கடற்கரையில் கடற்பாசியால் பக்தர்கள் தவிப்பு
தீர்த்தாண்டதானம் கடற்கரையில் கடற்பாசியால் பக்தர்கள் தவிப்பு
தீர்த்தாண்டதானம் கடற்கரையில் கடற்பாசியால் பக்தர்கள் தவிப்பு
ADDED : செப் 22, 2025 03:57 AM

தொண்டி : தீர்த்தாண்டதானம் கடற்கரையில் படர்ந்திருக்கும் கடற்பாசியால் மக்கள் புனித நீராட முடியாமல் தவிக்கின்றனர்.
தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. சீதையை மீட்கும் பொருட்டு ராமபிரான் இவ் வழியே செல்லும் போது இங்கு இளைப்பாறினார். அவருக்கு தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததாக வரலாறு உள்ளது.
அமாவாசை நாட்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி, பித்ருகளுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்துவிட்டு அங்குள்ள கடலில் நீராடி, சுவாமி தரிசனம் செய்வார்கள்.
கடற்கரையில் கடற்பாசி படர்ந்திருப்பதால் பக்தர்கள் நீராட முடியாமல் தவிக்கின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடலில் புனித நீராடுவதற்கு அடிப்படை வசதியில்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பாக கடற்பாசியில் கடலுக்குள் இறங்க முடியாமல் அவதிபட்டனர்.
படித்துறை கட்டவும், கடலில் குளித்து விட்டு வரும் பக்தர்களுக்கு உடைமாற்றும் அறைகட்டவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.