/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் பக்தர்கள் அவதி ரோடு, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை

ADDED : டிச 25, 2025 05:26 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங்கில்சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளதுடன் குடிநீர்,கழிப்பறை வசதிகளின்றி பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர். இந்த வாகனங்களை ஜெ.ஜெ., நகரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்வார்கள். இங்கு ஒரு வாகனத்திற்கு ரூ. 20 கட்டணமாக கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது.
கார் பார்க்கிங் வளா கத்தில் பக்தர்களுக்கு ஓய்வு அறை கட்டடம், சுத்தி கரித்த குடிநீர், கழிப்பறை வசதி இருந்தது. மேலும் வாகனங்களை பாதுகாக்க 12 சிசிடிவி., கேமராக்கள் இருந்தது.
இவைகளை துவக்கத்தில் பராமரித்த கோயில் நிர்வாகம் காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டதால் தற்போது சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும் சிசிடிவி., கேமராக்கள் மற்றும் சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் பழுதாகி முடங்கி கிடக்கிறது.
இதனால் பக்தர்கள் தாகம் தணிக்க கடைகளில் குடிநீர் பாட்டில் வாங்கி பருகும் அவல நிலை உள்ளது. கழிப்பறையில் தண்ணீர் இன்றி பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சுகாதாரக் கேடாக மாறியுள்ளது.
இதனை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் ஹிந்து சமய அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை.
இக்கோயிலில் சிறப்பு தரிசனம், புனித நீராடல், உண்டியல் காணிக்கை என ஓராண்டில் சராசரியாக ரூ. 30 கோடி வருவாய் கிடைத்தும் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது என பக்தர்கள் தெரிவித்தனர்.