/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்
ADDED : ஜூலை 25, 2025 02:01 AM

ராமேஸ்வரம்:ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
ஜூலை 19ல் ராமேஸ்வரம் கோயிலில் கொடி ஏற்றப்பட்டு ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது. நேற்று 6ம் நாள் ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர்.
பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் 'சிவசிவ' என கோஷங்களை எழுப்பியபடி புனித நீராடினார்கள்.
பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையிலும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
காலை 11:00 மணிக்கு கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமான் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில்எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தனர். பக்தர்கள் வருகையால் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் வரை வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் ஒருவழி பாதையாக மாற்றினர்.
இருப்பினும் பக்தர்கள் வாகனங்களை ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் நிறுத்தி வைத்திருந்தனர்.
கடல் உள்வாங்கியது நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் 100 மீ., துாரத்திற்கு பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில்தெரிந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து பாறை மீது ஏறி கடலில் இறங்கி நீராடினார்கள். மதியம் 1:00 மணிக்கு கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்த கடற்கரை இயல்புக்கு திரும்பியது.