/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்
/
ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED : அக் 03, 2024 06:29 AM

ராமேஸ்வரம், : மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
மகாளய அமாவாசையான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். அக்னி தீர்த்த கடலில் திதி, தர்ப்பணம் செய்து புனித நீராடினர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதியில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நேற்று மட்டும் ராமேஸ்வரம் கோயிலுக்குள் 38,000 பக்தர்கள் புனித நீராடினர். ராமேஸ்வரம் நகராட்சி டோல்கேட்டில் 2,600 வாகனங்களுக்கு தலா 100 முதல் 150 ரூபாய் வரை நுழைவு வரி வசூலித்தனர். ராமேஸ்வரம் யாத்திரை பணியாளர் சங்கம் சார்பில் கோயிலுக்குள் நீராடிய 20 ஆயிரம் பக்தர்களுக்கு பிஸ்கட், பால் வழங்கப்பட்டது. பல இடங்களில் சேவையாளர்கள் அன்னதானம் வழங்கினர்.
கோயில் ரதவீதி, திட்டக்குடி சாலை, அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் ஆட்டோக்கள், வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்ததால் நெரிசல் இன்றி பக்தர்கள் நடந்து சென்றனர்.