/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பூர் விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

ADDED : ஆக 28, 2025 05:57 AM

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில், பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா, ஆக.18 இல், கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற விழாவில், தினமும் மாலையில், வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் எட்டாம் நாளான ஆக.25 இல் விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், முக்கிய விழாவான சதுர்த்தி தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள மோர்ப்பண்ணை கடலில், பக்தர்களுடன் புனித நீராடிய விநாயகர், அங்கிருந்து காளை வாகனத்தில் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தார். தொடர்ந்து பக்தர்கள் கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர் . பின்னர், மூலவருக்கு நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.