/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுமுறை நாளில் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்
/
விடுமுறை நாளில் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை நாளில் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை நாளில் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 20, 2025 05:06 AM
தேவிபட்டினம்: பொங்கல் விடுமுறையில் கடைசி நாளான நேற்று நவபாஷாண நவக்கிரகத்தில் ஏராளமான சுற்றுலா பணிகள், பக்தர்கள் குவிந்தனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டியும் பரிகார பூஜைகள் செய்வதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்தில், பொங்கல் விடுமுறை நாட்களில் தொடர்ந்து வெளியூர் பக்தர்கள் வந்தனர். இந்த நிலையில், ஞாயிறு விடுமுறை நாளான நேற்று, அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நவபாஷாணத்திற்கு வருகை தந்தனர். நவக்கிரகங்களை நடைமேடை வழியாக சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.