ADDED : ஏப் 27, 2026 12:03 AM

அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: - நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறையையொட்டி நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, கோயில் வளாக 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் தரிசித்தனர். பின் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்று கடல் அழகை கண்டு ரசித்தனர். இங்கு வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
