/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
/
ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : டிச 29, 2024 06:51 AM

ராமேஸ்வரம்: பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், ராமேஸ்வரம் கோவிலுக்கு வருகை தந்தனர்.
பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு, கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.
கோவிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோவில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை ஒருவழிப்பாதையாக மாற்றினாலும் வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் வருகையால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.