/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் ரயிலில் பக்தர்கள் ஓசி பயணம்: ரூ.24 ஆயிரம் அபராதம்
/
ராமேஸ்வரம் ரயிலில் பக்தர்கள் ஓசி பயணம்: ரூ.24 ஆயிரம் அபராதம்
ராமேஸ்வரம் ரயிலில் பக்தர்கள் ஓசி பயணம்: ரூ.24 ஆயிரம் அபராதம்
ராமேஸ்வரம் ரயிலில் பக்தர்கள் ஓசி பயணம்: ரூ.24 ஆயிரம் அபராதம்
ADDED : டிச 21, 2025 03:27 AM

ராமேஸ்வரம்: மதுரை - ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலில் ஓசியில் பயணம் செய்த மகாராஷ்டிரா பக்தர்கள் 300 பேருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.
மகாராஷ்டிரா நாசிக் பகுதியை சேர்ந்த 400 பக்தர்கள் ராமேஸ்வரம் வர நேற்று முன்தினம் இரவு மதுரை ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கினர். நேற்று காலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரயிலில் பக்தர்கள் ஏறினர்.
இதில் 100 பயணிகள் ரூ.50க்கான டிக்கெட் எடுத்த நிலையில் மற்றவர்கள் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணித்தனர்.
இந்நிலையில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையிட்டதில் 300 பக்தர்கள் டிக்கெட் இன்றி பயணித்தது தெரிந்தது.
இதையடுத்து 300 பேருக்கும் அபராதம் செலுத்துங்கள் என டிக்கெட் பரிசோதகர்கள் கேட்டதும், பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு வழியாக 80 பேருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீதமுள்ள பக்தர்களுக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்து ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் உதவியுடன் பக்தர்களை தடுத்து நிறுத்திய போது வாக்குவாதம் செய்து கோஷமிட்டபடி ஸ்டேஷனில் இருந்து பயணிகள் வெளியேறி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
இதனைக் கண்ட டிக்கெட் பரிசோதகர்கள், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

