/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வருடாபிஷேக விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
/
வருடாபிஷேக விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED : மே 20, 2025 11:34 PM
கமுதி : கமுதி அருகே வடுகபட்டி கிராமத்தில் செல்வவிநாயகர், சுந்தர்ராஜ பெருமாள், குங்கும காளியம்மன், நாககன்னியம்மன், கருப்பணசுவாமி, கோயில் வருடாபிஷேக விழா, முத்துராமலிங்கத்தேவர் 12ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர்.
விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
குங்கும காளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்பு கோயில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் வைத்தனர்.இரவு 508 விளக்குபூஜை நடந்தது.
கமுதி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.