/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு
/
பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு
பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு
பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு
ADDED : மார் 10, 2024 04:06 AM

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே சோனைப்பிரியான் கோட்டை கிராமத்தில் வீரமாகாளியம்மன், அய்யனார், வாழவந்தம்மன், கைலாசநாதர் உட்பட கிராம தெய்வங்களுக்கு 11ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது.
விழாவில் வாழவந்தம்மன், அய்யனார், பேச்சியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது.
வீரமாகாளியம்மன் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் பால்குடம், அக்னிசட்டி எடுத்து பேச்சியம்மன், சூந்தாளமூர்த்தி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
கோயில் முன்பு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வாழவந்தம்மன், பேச்சியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
விழாவை முன்னிட்டு திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.