/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடற்புழு நீக்க விழிப்புணர்வு
/
குடற்புழு நீக்க விழிப்புணர்வு
ADDED : பிப் 19, 2026 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியும், இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமியும் இணைந்து நடத்திய குடற்புழு நீக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல டாக்டர் செய்யது இப்ராஹிம் பங்கேற்றார். டாக்டர் அஜிதா பேசினார். டாக்டர்கள் பாபு அப்துல்லா, ஷிபா, அஜிதா, அகிலா, அலகேஷ் குப்தா மருத்துவ அறிவுரை வழங்கினர். செய்யது அம்மாள் செவிலியர் பள்ளி மாணவிகள் நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செய்யது அம்மாள் செவிலியர் பள்ளி முதல்வர், ஆசிரியைகள் செய்தனர்.

