/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீண்டும் லஞ்ச புகாரில் தனுஷ்கோடி போலீசார்
/
மீண்டும் லஞ்ச புகாரில் தனுஷ்கோடி போலீசார்
ADDED : மே 12, 2025 11:37 PM
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், புதுரோடு, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரத்தை உள்ளடக்கிய புதுரோட்டில் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்றவர் மீது வழக்கு பதியாமல் இருக்க ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஏப். 29ல் தனுஷ்கோடி போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சபாபதி, இரு போலீசார் கைதாகினர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற இரு ஆட்டோவை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் இரு ஆட்டோவுக்கு பெர்மிட் இல்லை. இதனால் வழக்கு பதியாமல் இருக்க ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம் வாங்கியதாக ராமேஸ்வரம் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் இணையதளத்தில் பதிவிட்டனர். தகவலறிந்த எஸ்.பி., சந்தீஷ், தனுஷ்கோடி போலீசாரை கடுமையாக கண்டித்து, மீண்டும் புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.