/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக வளர்ச்சித்துறையினர் சென்னையில் செப்.27ல் தர்ணா
/
ஊரக வளர்ச்சித்துறையினர் சென்னையில் செப்.27ல் தர்ணா
ஊரக வளர்ச்சித்துறையினர் சென்னையில் செப்.27ல் தர்ணா
ஊரக வளர்ச்சித்துறையினர் சென்னையில் செப்.27ல் தர்ணா
ADDED : செப் 23, 2024 02:19 AM
ராமநாதபுரம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சென்னையில் செப்.27ல் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் பாரி தெரிவித்திருப்பதாவது:
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனின் ஊழியர்கள் விரோத போக்கை கண்டித்தும், அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னையில் பனகல் மாளிகையில் செப்.27ல் காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளில் இருந்து மாவட்ட, வட்டார நிர்வாகிகள், மற்ற மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். வீடு கட்டும் திட்டம், ஊரக குடியிருப்புகள் பராமரிப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதியை விடுவிக்க கோரி கூடுதல் செயலாளர், இயக்குநரை வலியுறுத்தி மாநில மையம் சார்பில் கடிதம் அனுப்பப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.