/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த ஜன.9ல் தர்ணா போராட்டம்
/
ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த ஜன.9ல் தர்ணா போராட்டம்
ADDED : டிச 19, 2024 04:28 AM
ராமநாதபுரம்: தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வலியுறுத்தி மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இன்று(டிச.19) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். சென்னையில் ஜன.9ல் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு காலப் பலன், மருத்துவ காப்பீடு திட்டம் வேண்டும் என வலியுறுத்தி மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
ஜன.,9ல் சென்னையில் பல்லவன் இல்லம் முன் தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.