/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தினைக்குளம்: ரோட்டோர கருவேல மரங்களால் பொதுமக்கள் அவதி
/
தினைக்குளம்: ரோட்டோர கருவேல மரங்களால் பொதுமக்கள் அவதி
தினைக்குளம்: ரோட்டோர கருவேல மரங்களால் பொதுமக்கள் அவதி
தினைக்குளம்: ரோட்டோர கருவேல மரங்களால் பொதுமக்கள் அவதி
ADDED : செப் 21, 2024 05:18 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சியில் சாலையோரங்களில் அதிகளவில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.
ஊராட்சிக்கு சொந்தமானஇடங்கள் மற்றும் ஊருணி கரையோரங்களில் சாலையின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள்அதிகளவில் வளர்ந்துஉள்ளது. தினைக்குளம் ஊராட்சியில் உள்ள 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு முறையாக பணிகள் ஒதுக்கீடு செய்யாமல் மெத்தனமாக உள்ளனர்.
ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணற்றை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துஉள்ளன. இதனால் மோட்டார் பம்ப் அறைகளில் பழுது நீக்க செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சமீப காலமாக தினைக்குளம் ஊராட்சியில் கரூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையோரங்களில் குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. இங்கு தோண்டப்பட்ட பள்ளங்களை முழுவதுமாக மூடாமல் சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளதால் பெருவாரியான டூவீலர் ஓட்டிகள்கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு ஊராட்சியில் உள்ள அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் மற்றும் சாலையோர பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விஷயத்தில் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.