/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது தினகரன் பேட்டி

ADDED : பிப் 03, 2024 01:33 AM
முதுகுளத்துார்:-மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் அவர் கூறியதாவது:
ஜனநாயக நாட்டில் கட்சி துவங்குவதற்கு, தேர்தலில் போட்டியிடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.
அவர்களை வெற்றி பெறச் செய்வதும், செய்யாததும் மக்களின் கையில் உள்ளது. பழனிச்சாமி சிறுபான்மையினர் காவலராக வேஷம் போடுகிறார். சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயற்சிக்கிறார்.
வரும் தேர்தலில் பழனிச்சாமிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இடைக்கால பட்ஜெட்டில் தொலை நோக்கு பார்வையுடன் பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.
பெண்கள் முன்னேற்றம், சுகாதாரத்துறை, போக்குவரத்து துறையின் பல்வேறு திட்டங்கள் வரவேற்கக் கூடியதாக உள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், வருமான வரி உச்சவரம்பு பற்றி அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியான பின் சொல்வதே நாகரிகம்.
இவ்வாறு கூறினார்.