/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை விவசாயத்திற்கு டீசல் மோட்டாரில் நீர் பாய்ச்சுதல்
/
கோடை விவசாயத்திற்கு டீசல் மோட்டாரில் நீர் பாய்ச்சுதல்
கோடை விவசாயத்திற்கு டீசல் மோட்டாரில் நீர் பாய்ச்சுதல்
கோடை விவசாயத்திற்கு டீசல் மோட்டாரில் நீர் பாய்ச்சுதல்
ADDED : ஜூலை 08, 2025 10:23 PM

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீரை விவசாயிகள் டீசல் மோட்டார் வைத்து கோடை நெல் வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன பகுதிகளான இருதயபுரம், நெடும்புளிக் கோட்டை, பொட்டக்கோட்டை, புலிவீர தேவன் கோட்டை, சிலுகவயல் உட்பட பல்வேறு பகுதிகளில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளது.
இந்நிலையில், பெரிய கண்மாயில் தண்ணீர் வற்றியதாலும், தொடர்ந்து நிலவிய வறட்சியாலும் கோடை நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வைகை உபரி நீர் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.
இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் கண்மாயில் தேக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசன மடைப் பகுதியில் இருந்து, டீசல் மோட்டார் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.