ADDED : செப் 21, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் தனியார் மகாலில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாநில துணைத் தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மகாலட்சுமி, பொருளாளர் நாகசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகையை ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும்.
இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் மாடியில் இயங்குவதால் மாற்றுத் திறனாளிகள் சிரமம் அடைந்துள்ளனர். அந்த அலுவலகத்தை கீழ் தளத்திற்கு மாற்ற வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
–
