/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் 108 இன்றி சிரமம்
/
கமுதி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் 108 இன்றி சிரமம்
கமுதி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் 108 இன்றி சிரமம்
கமுதி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் 108 இன்றி சிரமம்
ADDED : நவ 20, 2024 04:53 AM
கமுதி : கமுதி அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் 108 சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் தற்போது ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
கமுதி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வாகன விபத்து, தலைக்காயம், இதய நோய், அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்புகின்றனர்.
நோயாளிகளை கமுதியில் உள்ள ஆம்புலன்ஸ் 108 மூலம் ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையில் இருந்து கமுதிக்கு வந்த போது ஆம்புலன்ஸ் விபத்திற்குள்ளானது.
தற்போது கமுதி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாமல் உள்ளது. அவசர காலத்தில் பெருநாழி, நத்தம், கீழராமநதி, பார்த்திபனுார், அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர்.
இதனால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்படுவதால் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடாக கமுதி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் 108 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.