/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.12ல் தினமலர் நடத்தும் 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி: குழந்தைக்கு நோட்டு, பென்சில் இலவசம் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில்

ADDED : அக் 07, 2024 10:52 PM
ராமநாதபுரம் : தினமலர் மாணவர் பதிப்பு மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் 'அனா ... ஆவன்னா... ' அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட அரண்மனை பின்புறம் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் அக்.12 காலை 8:50 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.
வித்யாரம்பம் (அறிவு ஆரம்பம்)
குழந்தைகளுக்கான வித்யாரம்பம் என்பது அவர்களை அறிவு உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு மங்கள விழா. விஜயதசமி என்றழைக்கப்படும் நவராத்திரியின் பத்தாம் நாளில் வித்யாரம்பம் நவராத்திரி விழாவின் முக்கிய நாளாக உள்ளது. 'வித்யா' என்றால் அறிவு மற்றும் 'ஆரம்பம்' என்றால் துவங்குதல் என்பதாகும். விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை காரணமாக பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி நன்னாளில் பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நாள் அவர்களின் வாழ்நாளில் மிக முக்கியமான நாள். அவர்களது ஆரம்ப நிலை கல்வியறிவு தான் அவர்களது அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் வாழ் நாள் முழுதும் துணை நிற்கும்.விஜயதசமி திருநாள் கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். உங்கள் வீட்டு இளந்தளிர்களின் விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நன்னாள். இரண்டரை வயது முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை கல்விக் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க பெற்றோர்களே அழைத்து வாருங்கள்.
இன்றே 98940 09414 எண்ணில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, அலைபேசி எண்ணை காலை 10:00 முதல் மாலை 6:00 மணிக்குள் முன்பதிவு செய்யுங்கள். முன் பதிவு செய்தவர்கள் அக்.12 ல் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நடக்கும் அரிச்சுவடி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.