/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிணற்றில் கொட்டிய மருத்துவ கழிவுப் பொருட்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : ஜன 20, 2025 07:30 AM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிசேரியில் கிணற்றில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
கீழக்கன்னிசேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கண்மாய் அருகே பழமையான கிணறு உள்ளது. இங்கு கடந்த சிலநாட்களாகவே அடையாளம் தெரியாத நபர்கள் இரவுநேரத்தில் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் காலாவதியான ஊசிகள், மாத்திரை, மருந்து குளுக்கோஸ் பாட்டில் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை கிணற்றில் கொட்டி சென்றுள்ளனர். கிணற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் இவை மிதக்கிறது.
தண்ணீர் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
கண்மாயில் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத அவலநிலையை உருவாகியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கீழக்கன்னிசேரி கிராமத்தில் கிணற்றில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை சுகாதாரத்துறையினர், துாய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.