ADDED : டிச 18, 2024 06:41 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே நயினாமரைக்கான் பகுதியைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி நிழற்வேணி. இவர் தமிழக அரசின் கனவுஇல்லம் திட்டத்தில் வீடு வழங்கக் கோரி ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகத்தில் மனு அளித்தார்.
நானும், எனது தாயாரும்வசித்து வந்த குடிசை வீடு மின்சார விபத்தில் தீப்பற்றிஎரிந்து விட்டது. இதற்கு அரசு எந்த உதவியும் தரவில்லை. தற்போது வீடு இல்லாமல் சிரமப்படுகிறோம். எனவே தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும்என வலியுறுத்தினார்.
