ADDED : ஆக 25, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாதந்திர உதவித்தொகையை ரூ.6000 ஆக உயர்த்தி வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ஹரிகர சுதன் முன்னிலை வகித்தனர்.
இதில் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும். இரு ஆண்டுகளுக்கும் மேலாக உதவித் தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.––––
