தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 28, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 03:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட டிச.,3 மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 ல் இருந்து ரூ.3000 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.1000த்தில் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அனைத்து அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us