/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை டூ தனுஷ்கோடி நீந்திய மாற்றுத்திறனாளிகள்
/
இலங்கை டூ தனுஷ்கோடி நீந்திய மாற்றுத்திறனாளிகள்
ADDED : ஏப் 20, 2025 03:12 AM
ராமேஸ்வரம்: இலங்கை டூ தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலில் மாற்றுத்திறனாளி இளம்பெண் உட்பட 10 பேர் நீந்தி கடந்தனர்.
மும்பையை சேர்ந்தவர் ஷஸ்ருதி, 19, பாலா கணேஷ் 22. இருவரும் ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளிகள். இவர்கள், மும்பையில் நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்று, பல நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
இருவரும் பாக் ஜலசந்தி கடலில் நீந்திக் கடக்க, மேலும் 8 வீரர்களுடன், நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து இரு விசைப்படகுகளில் இலங்கை தலைமன்னார் சென்றனர்.
ஷஸ்ருதி, பாலாகா கணேஷ் இருவரும் நேற்று முன்தினம் காலை தலைமன்னார் கடலில் குதித்து நீந்தத் துவங்கினர். மற்ற வீரர்கள் 8 பேர் ஒருவர் மாற்றி ஒருவர் என்ற ரீலே முறையில் நீந்தினர். இதில், மாற்றுத்திறனாளி ஷஸ்ருதி 11 மணி நேரமும், பாலாகணேஷ் 10:30 மணி நேரமும் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர். ரீலே முறையில் நீந்தியவர்கள், 10 மணி நேரத்தில் வந்தனர்.

