sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

/

 மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

 மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

 மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்


ADDED : பிப் 13, 2026 05:34 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலி யுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட துணைத் தலைவர் முருகன், தாலுகா தலைவர் முனியசாமி, செயலாளர் ஆரோக்கிய பிரபாகர், பொருளாளர் மயில்சாமி முன்னிலை வகித்தனர்.

அப்போது ஆந்திராவில் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.6000, 10 ஆயிரம், 15 ஆயிரம் வழங்கி வருவதைப் போல் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தி வழங்கவும் துறை அமைச்சராக இருந்து வரும் முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறி காந்தி சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர். உடன் கமுதி தாலுகா தலைவர் சந்திரன் பொருளாளர் ஸ்டாலின், சிக்கல் சுல்தான் உட்பட 63 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us