/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டம்
/
மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டம்
ADDED : ஏப் 07, 2025 06:55 AM
திருவாடானை : திருவாடானையில் மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநில அவைத் தலைவர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருவாடானை கூட்டுறவு வங்கி மேலாளர் சந்திரசேகர், ஆயிரவசிய சங்க தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமூக நலத்துறை, சிவில் சப்ளை மற்றும் டி.எஸ்.பி. அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மாடியில் இயங்குவதால் மாற்றுதிறனாளிகள் மாடிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த அலுவலகங்கள் கீழ் தளத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு முழுமையாக ஒதுக்க வேண்டும்.
மாத உதவித் தொகையை 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

