/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரிடர் கால மீட்பு பணி விழிப்புணர்வு முகாம்
/
பேரிடர் கால மீட்பு பணி விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 15, 2024 06:38 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் கட்டடப் பொறியியல் துறை, நாட்டு நலப்பணி திட்டம், போதை மருந்து எதிர்ப்பு மையம் மற்றும் ராமநாதபுரம் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் உதயகுமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா முன்னிலை வகித்தார். பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.
கண்காணிப்பாளர் ராஜ்குமார், உதவி பேராசிரியர்கள் உமா மகேஸ்வரி, மணிகண்டன், சாந்தி, கார்த்திகேயன், துறைத்தலைவர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் லாவண்யா, சபரிகணேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயராகவன் செய்தனர்.