UPDATED : நவ 11, 2026 06:27 PM
ADDED : நவ 11, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமத்தில் அருப்புக்கோட்டை என்.எம்.வி.வேளாண்மை கல்லுாரி சார்பில் இயற்கை வேளாண்மை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
விவசாயிகள் தங்களின் களைகட்டுப்பாட்டு முறை, களை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பங்கள், களைக் கொல்லியை தேர்வு செய்வது குறித்து விளக்கினர். தொடர்ந்து இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்து கல்லுாரி மாணவி நுாதனாஸ்ரீ விளக்கினார். தசகவ்யா எனும் இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். ––
