/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருத்தி செடிகளில் நோய் தாக்குதல்
/
பருத்தி செடிகளில் நோய் தாக்குதல்
ADDED : பிப் 05, 2024 11:34 PM
ஆர்.எஸ்.மங்கலம், -ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பருத்தி செடிகளில் நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலம், செங்குடி, வரவணி, வண்டல், சீனாங்குடி, எட்டியதிடல், புல்லமடை, வல்லமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்போது வளர்ச்சி நிலையில் பூக்கள் பூத்துக் காய்கள் காய்க்கும் பருவத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பருத்தி செடிகளின் இலைகளில் நோய் தாக்குகிறது.
நோய் தாக்கப்பட்ட பருத்தி இலைகள் ஓட்டை, ஓட்டையாகவும், செடிகள் வளர்ச்சி குன்றியும் காணப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் என கவலை தெரிவித்தனர். அதிகாரிகள் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.