/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஸ்தானிகரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி
/
ஸ்தானிகரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : நவ 03, 2024 03:08 AM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பு சுவாமி நகைகள் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்தானிகர் சீனிவாசன் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது.
திவான் பழனிவேல் பாண்டியன் புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகைகளின் பொறுப்பாளர் கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
ஸ்தானிகர், அவருடன் பணியாற்றிய அனைத்து பணியாளர்களிடமும் விசாரித்தனர்.
இதையடுத்து சீனிவாசன் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
அதில் இடைக்கால முன் ஜாமின் வழங்கி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், மோசடி தொடர்பாக சிறப்பு ஆணையம் அமைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆணையம் இதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை சீனிவாசனுக்கு வழங்கிய முன் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக சீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
திவான் பழனிவேல் பாண்டியன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சீனிவாசன் முன் ஜாமினை தள்ளுபடி செய்யப்பட்டது.
அவரை போலீசார் தேடி வருகின்றனர்.