ADDED : பிப் 07, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் கீரைக்காரத் தெருவில் குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. குழாயை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவில் உழவர் சந்தை பின்புற வாசல் அருகே ஆழ்குழாய் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பல மாதங்களாக பயன்பாடில்லாமல் திருகு குழாய்கள் சேதமடைந்துள்ளன. தொட்டியில் தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கோடை காலத்தில் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆழ்குழாய் தண்ணீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
