/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தங்கச்சிமடம் காப்பு காடுகளில் பாலிதீன் கழிவுகளை அகற்றம்
/
தங்கச்சிமடம் காப்பு காடுகளில் பாலிதீன் கழிவுகளை அகற்றம்
தங்கச்சிமடம் காப்பு காடுகளில் பாலிதீன் கழிவுகளை அகற்றம்
தங்கச்சிமடம் காப்பு காடுகளில் பாலிதீன் கழிவுகளை அகற்றம்
ADDED : ஜூலை 20, 2025 10:53 PM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் வனத்துறையினர் சார்பில், தங்கச்சி மடம் காப்பு காடுகளில் கிடந்த பாலிதீன் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை அகற்றி சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா தலைமை வகித்தார். வனத்துறையினர் தங்கச்சி மடம் காப்பு காடுகளில் சுகாதார பணியாளர்கள் உதவியுடன் 74 கிலோவையும், 120 கிலோ பாட்டில்களையும் அகற்றினர்.
அகற்றப்பட்ட அனைத்தும் அருகிலுள்ள வள மையத்தில் தரம் பிரிக்கப்பட்டது. 50 துாய்மை பணியாளர்களுக்கு கழிவு மேலாண்மை பற்றிய பயிற்சியும், பாலிதீன் தீங்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வரும் காலங்களில் ராமேஸ்வரம் போன்ற எளிதில் பாதிக்கப்படும் சூழல் உணர்வு பகுதியில் பாலிதீன் பைகள், பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்று உலக நெகலி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட வனஉயிரின கோட்டம் சார்பில் அரியமான் கடற்கரையில் துாய்மை பணி நடந்தது.
கோட்ட வனக்காப்பாளர் முருகன் வழிகாட்டுதலில் சுற்றுச்சூழல் வளர்ச்சி அலுவலர் உதவி வனக்காப்பாளர் கோபிநாத் தலைமையில் அரியமான் கடற்கரையில் கிடந்த பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில், குப்பையை அகற்றி சுத்தம் செய்தனர்.
வனச்சரகர் செல்வம், வனப்பணியாளர்கள், மீனவ கல்லுாரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.